உங்களதவிர ஆதரிக்க யாருமில்ல

 

உங்களதவிர ஆதரிக்க யாருமில்ல

உங்களதவிர விசாரிக்க எவருமில்ல

இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல

இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல

 

 

நீதிமானின் துன்பங்கள் அனேகமாயிருந்தாலும்(2)

அவைகள் அனைத்திலுமே விடுதலை அளித்திடுவீர்(2)

தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர்(2) - உங்களதவிர

 

 

நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கணியீர்(2)

நறுங்குண்ட ஆத்துமாவை அற்பமாய் எணணமாட்டீர்(2)

காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர்(2) - உங்களதவிர

 

 

நெரிந்துபோகும் நாணலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை(2)

மங்கி எரிகின்ற திரியை அணைப்பதில்லை(2)

துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் (2)-உங்களதவிர